இனியவை கூறல்
வியாழன், 14 ஜூன், 2012
ஞாயிறு, 11 மார்ச், 2012
திங்கள், 5 டிசம்பர், 2011
பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் - தினமணி கதிர்
தினமணி நாளிதழின் ஞாயிறு இணைப்பாக வரும் தினமணி கதிர் வார இதழில் கவிக்கோ திரு. ஞானச்செல்வன் அவர்கள் எழுதும் "பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்" என்ற தொடர் வருகிறது. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நம்மை அறியாமலேயே நாம் செய்து வரும் பல்வேறு பிழைகளையும் எளிதாக சுட்டிக்காட்டுகிறார். அழகான விளக்கங்களுடன் அவற்றை திருத்தி அமைக்கிறார்.
உதாரணத்திற்கு சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன். நீங்களே தினமணிகதிர் வாங்கி தொடர்ந்து படியுங்கள். இந்தத் தொடர் இன்னும் வளரவேண்டும். இறுதியில் இவை அனைத்தையும் தொகுத்து நூலாக வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
.......
"ஒவ்வொரு பூக்களுமே' திரைப்பாடல் வெளிவந்தபோதே ஒவ்வொரு பூவும் என்றுதானே வரும்? பூக்கள் என்றது பிழை என்று பேசப்பட்டதைப் பலரும் அறிவர்.
"இதழில் வெளிவரும் ஒவ்வொரு துணுக்குகளும் அருமை' எனும் வாக்கியத்தைப் படித்தபோது மேற்சொன்ன பாடல் பற்றிய செய்தி நினைவில் எழுந்தது. ஒவ்வொரு துணுக்கும் என்றோ எல்லாத் துணுக்குகளும் என்றோ எழுதிட வேண்டும்.
இவ்வாறே "ஐந்து பேரின் மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது'. இந்த வாக்கியத்திலும் ஒருமை, பன்மை மயக்கம் உள்ளது. ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று முடித்தல் வேண்டும்.
"சட்டத்தைத் திரும்பப் பெறப்பட வேண்டும்' என்று ஒரு செய்தியாளர் படித்தார். சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும். அல்லது சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று இத்தொடர் அமைந்திட வேண்டும்.
......
ஒருவர், ""பால்கனிக்குத் தமிழ் என்ன?'' என்று கேட்டார். பால்கனி தமிழ்தானே! பால், கனி (பழம்) தமிழ்ச் சொற்கள் அல்லவோ என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டுச் சிந்தித்தோம். நிலா முற்றம் என்று சொல்லலாமே!
நிலாமொட்டை மாடியிலும் நன்றாகத் தெரிந்தாலும் வீட்டின் ஒரு பகுதியான பால்கனியில் நின்று நிலவைப் பார்க்க முடியும்.
அதனால் நிலா முற்றம் எனலாம்.
"வேயா மாடமும் வியன்கல இருக்கையும்' என்று சிலப்பதிகாரத்தில் ஒரு தொடர் உண்டு. இதில் வேயா மாடம் - மேலே கூரை வேயப்படாத திறந்தநிலை மாளிகை எனலாம். இப்போதெல்லாம் சில உயர்நிலை உணவகங்களில் "ரூஃப் கார்டன்' எனும் இடத்தில் உணவு பரிமாறுகிறார்கள். இதுவே வேயா மாடம்.
...
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
நன்றி.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)